புற்றுநோயாளிகளிடம் காணப்படும் நான்கு பொதுத் தன்மைகள்

Back to All Articles
cancer

புற்றுநோயாளிகளிடம் காணப்படும் நான்கு பொதுத் தன்மைகள்

இன்று நாம் சுற்றிப் பார்த்தால், நம்மிடம் சிறந்த மருத்துவர்கள், மருத்துவமனைகள், நியூட்ரிஷனிஸ்ட்கள், சப்ளிமென்ட்கள், ஜிம்கள், சூப்பர் ஃபுட்கள் மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு என்ற பெயரில் சாத்தியமாகும் அத்தனையும் உள்ளன.ஆனாலும் பரவக் கூடிய ஒன்றாக உள்ளது. அதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தரவு இந்தியாவில் மட்டுமிருந்து அல்லாமல் உலகம் முழுவதுமிருந்து எடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, வியட்நாம், ரஸ்யா, யுஎஸ்ஏ, தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தைவானிலிருந்து வரும் புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

இன்று நாம் வாழும் உலகம் மாசுபட்டு உள்ளது என்பதில் சந்தேகமில்லை. வெளிப்புற காரணிகள் அல்லாமல் நாம் சுவாசிக்கும் காற்று முதல் நாம் உண்ணும் உணவு வரை மாசுபட்டுள்ளது. நமது புத்திசாலித்தனமான உடல், புற்றுநோய்க்கு ஏன் வேகமாகஆளாகி வருகிறது என்பதற்கான உட்புற காரணிகளையும் நாம் தேட வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டில் நாங்கள் சோதனை செய்து ஆலோசனை வழங்கிய 97% புற்று நோயாளிகளில் சில ஆர்வமான போக்குகள் மற்றும் பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான மக்களின் நம்பிக்கைக்கு மாறாக, புற்றுநோய் உடல் பருமன், ரசாயனங்கள், புகையிலை, மது பயன்படுத்துதல் மற்றும் மரபணு பிரிவுடன் தொடர்பில்லாததாக உள்ளது. அவையும் தூண்டுகின்றன என்ற அதேவேளையில், அவற்றுக்கும் மேலாக ஏதோ உள்ளது.

பின்வருபவை பொதுத்தன்மைகளாக உள்ளன:

நாட்பட்ட :

மலச்சிக்கல் வெறும் ஆரோக்கியப் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு நோயாகும். உங்களுக்கு நாட்பட்ட மலச்சிக்கல் ஏற்படும்போது, நீங்கள் உங்கள் உடலுக்குள் விஷமான குப்பைகளை சேமிக்கிறீர்கள். அதாவது வெளியேற்ற வேண்டிய குப்பைகளை சேர்த்து வைக்கிறீர்கள். குறிப்பாக பெண்களில், மலக்குடலில் மலம் சேரும்போது, வெளியேற்றப்பட வேண்டிய ஈஸ்ட்ரோஜென் (பெண் ஹார்மோன்) உடலுக்குள் சேமிக்கப்படுகிறது. இது ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கம் கொண்ட புற்றுநோய்களை ஏற்படுத்துகிறது. விஷ குப்பைகள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து மரபணு பிளவு ஏற்பட அல்லது ஏற்கனவே பிளவு பட்ட மரபணு தன்னை வெளிப்படுத்தும் சூழலை ஏற்படுத்துகிறது.

அமிலத்தன்மை (பித்தம்)

பித்தம் காரணமாகஏறக்குறைய எல்லா ஆரோக்கிய பிரச்சனைகளும் துவங்குகின்றன. புற்றுநோய் செல்கள் அமிலத்தன்மை கொண்ட சூழல்களில் வளர்ச்சி அடைகின்றன. அமிலம் அதிகமாக உள்ள உடல் ஒரு கட்டி பெரிதாக வளர அனுமதிக்கிறது. அது ஏறக்குறைய எல்லா வைரஸ்கள், பேதோஜென்கள் மற்றும் நுண்ணியிரிகள் வளர நாற்றாங்காலாக அமைகிறது.இவ்வாறு இருக்கும்போது, அல்காலைன் உணவுகளை உட்கொள்வது ஆரோக்கியமான ஒன்று அல்ல. நமது உடல், பொருத்தமான பிஎச் மதிப்பை பராமரிக்க அமிலம் மற்றும் அல்காலைனை சரியான சமநிலையில் வைத்திருக்க வேண்டியுள்ளது.

உணர்வு ஆரோக்கியமின்மை:

ஏறக்குறைய எல்லா நேயாளிகளும் புற்றுநோய் அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகளோடு தொடர்பு கொண்டதாகச் சொல்லலாம். புற்றுநோய் இருப்பது கண்டறிவதற்கு 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் (அல்லது இன்னும் அதிக காலம்) வரை நடைபெற்ற நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டதாக இருக்கலாம். 97% நோயாளிகள், இந்த காலத்தில் தாங்கள் அனுபவித்த தீவிரமான மனநிலையுடன் இதனைத் தொடர்பு படுத்தலாம். ஆனால் இது தினசரி வாழ்வில் ஏற்படும் அழுத்தம் பற்றியது அல்ல. இது ஒரு நோயாளிக்குள்ளாக பல மாதங்கள் மற்றும் ஆண்டுகளுக்கு நீடிக்கும் நாட்பட்ட அழுத்தம் பற்றியதாகும். எடுத்துக் காட்டாக விவாகரத்து, அன்புக்குரியவரின் இறப்பு, உடல் வலி, பெற்றோரை இழத்தல், நிதிப் பிரச்சனைகள், தாழ்வு மனப்பான்மை மற்றும் நம்பிக்கையின்மை போன்ற பிரச்சனைகள் ஆகும். இந்த அழுத்தங்கள் அனைத்தும் உள்ளுக்குள் இருந்தவாறு ஒருவரின் உடல் நலனை பாதிக்கத் தொடங்குகின்றன. மிகவும் மோசமடையும்போது, இவை நமக்குள் நம்மை கட்டிப்போட்டு விடுகிறது. விஷக் குப்பைகளைப் போலவே விஷ உணர்வுகளையும் வெளியேற்ற வேண்டியுள்ளது.

அதேவேளையில், யோகாசனம், பாராயானம், தியானம், கற்பனை செய்தல், பகிர்தல், நேர்மறை நம்பிக்கைகள் அல்லது நன்றி தெரிவிக்கும் வழக்கங்கள் மூலமாக நாம் சரியான முறையில் அழுத்தங்களை கையாளும்போது குணமாகுதல் நடைபெறுவதை பார்க்க முடிகிறது.

குறைவான தூக்கம்:

ஏறக்குறைய எல்லா புற்றுநோய் நேயாளிகளும் தங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான காலத்திற்கு குறைவாகவே தூங்குபவர்களாகவே உள்ளனர். தூக்கம் நமது உடலில் இயற்கை சுழற்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் இயற்கைக்கு மாறாக செயல்படும்போது, நமக்கு ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. நாம் தூங்கும்போது, நமது உடலில் புற்றுநோய் எதிர்ப்பு ஹார்மோன் என்றும் அழைக்கப்படும் மெலாடோனின் என்ற ஹார்மோன் சுரக்கப்படுகிறது. மெலாடோனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்போது, இது புற்றுநோய்க்கு மட்டுமல்லாமல் எந்தவொரு நோய்க்குமான முதல் மற்றும் இறுதி பாதுகாப்பாக அமைகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 97% புற்றுநோயாளிகளில் உச்சமாக உள்ள இந்த நான்கு பொதுவான தன்மைகளை நாங்கள் பார்த்தோம். இப்போதும் இந்தப் போக்கு ஒரே மாதிரி இருக்கிறது.

பின்வரும் நிலைகளின் காரணமாக மேற்கண்ட 4 பொதுத் தன்மைகள் ஏற்படலாம்:

  1. செயல்படாத வாழ்க்கை முறை: உடற்பயிற்சி செய்வது நல்ல உணர்வைத் தரும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தூண்டுகிறது என்பதால் அதிகம் செயல்படாத வாழ்க்கை முறை, எடைப் பிரச்சனைகள், பித்தம், மந்தமான லிம்பாடிக் டிரெயினேஜ் (எனவே விஷம் சேருதல்), மலச்சிக்கல் மற்றும் பெரும்பாலான நேரம் தாழ்வாக உணருதலை ஏற்படுத்துகிறது.
  2. குறைவாக தண்ணீர் அருந்துதல்: சரியான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலமாக பெரும்பாலான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுத்து விடலாம். குறைந்த தண்ணீர் என்பதற்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவு, மலச்சிக்கல், பித்தம், மூளை ஆரோக்கிய குறைவு மற்றும் குறைந்த ஆற்றல் அளவுகள்.
  3. விஷ சிந்தனைகள்: மனது-உடல் தொடர்பு உண்மையானது. நீங்கள் மற்ற அனைத்து வாழ்க்கை முறை காரணிகளை மறுத்தாலும் கூட நோய் பற்றிய தீவிரமான அச்சம் நோயை வெளிப்படுத்தும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் இருக்கிறீர்கள். கோபமான சிந்தனை இல்லாமல் ஒருவர் கோபப்பட முடியாது அல்லது சந்தோஷமான சிந்தனை இல்லாமல் ஒருவர் சந்தோஷமாக இருக்க முடியாது. ஒவ்வொரு சிந்தனையும் ஏதாவது ஒன்றை வெளிப்படுத்துகிறது. புற்றுநோயாளிகள் விஷயத்தில், கோபம், எரிச்சலடைதல், அச்சம், ஆத்திரம், பொறாமை, ஓசிடி அம்சங்கள், மன்னிக்க முடியாததன்மை ஆகியவற்றை நாம் காண்கிறோம். இந்த எதிர்மறை உணர்வுகள் அனைத்தும் எதிர்மறை அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது பித்தம், குறைபாடுள்ள குடல் ஆரோக்கியம் மற்றும் மேலே பார்த்த ஒவ்வொரு பொதுத்தன்மைகளை ஏற்படுத்துகின்றன.

லூக்கா கூட்டின்ஹோ
ஒருங்கிணைந்த மற்றும் வாழ்க்கை முறை மருந்து – புனிதமான ஊட்டச் சத்து
இணையதளம் – www.lukecoutinho.com
மின்னஞ்சல் – [email protected]

Share this post

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to All Articles