உங்கள் நரைமுடியை மறைக்க உதவும் இயற்கை வீட்டு நிவாரணிகள்

Back to All Articles
grey hair

உங்கள் நரைமுடியை மறைக்க உதவும் இயற்கை வீட்டு நிவாரணிகள்

ஃபெல்லிகிளை சுற்றியுள்ள மெலானோசைட்கள் குறையும்போது அல்லது மெலானின் உற்பத்தியை நிறுத்தும்போது உங்கள் கூந்தல் நரைக்கிறது. நரைமுடி உண்மையில் ஒருவரின் வாழ்க்கையை மிகவும் சின்னாபின்னமாக்கும் ஒன்றாகும். முக்கியமாக கூந்தல் ஃபெல்லிகிளை சுற்றியுள்ள மெலானோசைட்கள் குறையும்போது அல்லது மெலானின் உற்பத்தியை நிறுத்தும்போது உங்கள் கூந்தல் நரைக்கிறது. கூந்தலை உருவாக்கும் முக்கிய புரதம் கெராட்டின்ஆகும். கெராட்டினில் மெலானின் இல்லாதிருப்பது அல்லது பற்றாக்குறை ஏற்படுவது கூந்தலில் நரையை ஏற்படுத்துகிறது.  மரபணுக்கள், வயது மற்றும் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மெலானின் பற்றாக்குறை தூண்டப்படலாம். கூந்தலை கருப்பாக்கும் ரசாயன சாயங்கள் கூந்தலின் கவர்ச்சி மற்றும் பளபளப்பைக் கொடுக்கலாம். ஆனால் நீண்டகாலம் பயன்படுத்தும்போது தீய விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இந்தக் கட்டுரையில்,நாம் நரை முடியை கருப்பாக்க உதவும் சில இயற்கை நிவாரணிகள் குறித்துப் பேசுவோம்.

  1. கருப்புத் தேனீர் (பிளாக் டீ)

உங்கள் நரை முடியில் கருப்புத் தேனீரை பயன்படுத்துவது படிப்படியாக உங்கள் கூந்தலை கருப்பாக்கலாம். மேலும் இது உங்கள் கூந்தலின் அளவை அதிகரித்து கூந்தலை பளபளப்பாக்குகிறது. ஒரு வாரத்தில் இருமுறை கருப்பு தேனீர் மாஸ்க்கை பயன்படுத்தவும். ஆற்றல் மிக்க பலன் கிடைக்க அதன் பிறகு ஷாம்ப்பூ போடுவதை தவிர்க்கவும். கருப்புத் தேனீர் நரை முடியை கருப்பாக்க உதவலாம்.

  1. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை கூந்தலுக்குத் தேவையான முக்கிய அம்சங்களாகும். அவை கூந்தல் ஃபோலிகிள்களில் நிறமி அணுக்களை பாதுகாக்க உதவி நாளுக்கு நாள் கூந்தலை கருப்பாக்க உதவுகின்றன.  சிறந்த பலன்களை பெற வாரத்திற்கு இரண்டு முறை நீங்கள் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை கலவையை உங்கள் கூந்தலில் பயன்படுத்தலாம்.

  1. நெல்லி

கூந்தலுக்கு நெல்லி சிறந்த ஒன்றாகும். அதனை சாய விழுதாக பயன்படுத்தும்போது மிகவும் பயன் தரத்தக்கது. நீங்கள் நெல்லிச் சாற்றை மருதாணியுடன் கலந்து உங்கள் கூந்தலின் மீதாகப் பயன்படுத்தலாம். நெல்லி கூந்தலுக்குப் போதுமான வலுவைத் தருகிறது. மேலும் தலைசருமம் இழந்த ஈரப்பதத்தைப் பெற உதவுகிறது. மருதாணியின் ஆன்ட்டி பாக்டீரிய மற்றும் ஆன்ட்டி ஃபங்கல் அம்சங்கள் தலை சருமத்தில் பிஎச் அளவை பராமரிக்க உதவுகிறது. நெல்லி மற்றும் மருதாணி கலவை சிறந்ததொரு வீட்டு நிவாரணியாகும். ஆற்றல் மிக்க பலன்களைப் பெற மாத்தில் ஒருமுறை இதனைப் பயன்படுத்தவும்.

  1. உருளைக் கிழங்கு

நீங்கள் எளிதாக உருளைக் கிழங்கு மாஸ்க்கை உருவாக்கலாம். இது படிப்படியாக, ஆனால் ஆற்றலுடன் உங்கள் கூந்தலை கருப்பாக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உருளைக் கிழங்கு கூழாக கரையும் வரை அதனை வேக வைப்பதுதான். பின்னர் அதனை வடிகட்டி திரவமாக எடுத்து உங்கள் கூந்தலில் பயன்படுத்தவும். பின்னர் தண்ணீரால் அலசிவிடவும். உருளைக் கிழங்கு ஸ்டார்ச் கரைசல் கூந்தல் நிறத்தை மீட்டு நரைப்பதை தடுக்கிறது.

  1. வரி சுரைக்காய்

வரி சுரைக்காய் தலை சருமத்தில் கூந்தல் நிறத்தை திரும்பப் பெற உதவுகிறது. இயற்கையிலேயே கருப்பாக மாற உதவுகிறது. நீங்கள் வரி சுரைக்காயை வேக வைத்து அதில் தேங்காய் எண்ணெயைச் சேர்க்க வேண்டும். அந்தக் கரைசல் குளிர்ச்சி அடைந்தவுடன் பயன்படுத்தவும். இந்த பேக் கூந்தலின் வேர்கள் வலுப்பட உதவுகிறது. ஆற்றல் மிக்க பலன்களைப் பெற இந்த மாஸ்க்கை வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்தவும்.

  1. ஓட்ஸ்

ஓட்ஸ் பல்வேறு ஆரோக்கிய பயன்களுக்குப் பெயர் பெற்றது. ஆனால் அது நரை முடியை கருப்பாக்கும் என்பது தெரியுமா? நீங்கள் தினமும் காலை சிற்றுண்டி வடிவில் அல்லது பதாம் எண்ணெய் ஊற்றி அதனை விழுதாக மாற்றிக் கொள்ளுங்கள். ஓட்ஸில் உள்ள பயோடின் நரை முடியை சிறப்பாக குணப்படுத்துகிறது. பயோடின் கூந்தலை கருப்பாக்க உதவுகிறது. அவற்றுக்கு ஆழமாக போஷாக்கு அளிக்கிறது. ஓட்ஸ் விழுதை இயற்கை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம். வாரத்தில் ஒருமுறை இந்த விழுதை பயன்படுத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

  1. வெங்காயச் சாறு

வெங்காயச் சாற்றில் கூந்தலை கருப்பாக்க காரணமாகும் என்ஸைமான கேடாலாஸ் நிறைந்துள்ளது. வெங்காயச் சாறு பயோடின், மக்னீசியம், காப்பர், வைட்டமின் சி, பாஸ்பரஸ், சல்பர், வைட்டமின்கள் பி1மற்றும் பி6மற்றும் ஃபோலேட் உள்ளது. இவை கூந்தலை  கருப்பாக்க உதவுகின்றன. கூந்தல் உதிர்வதையும் தடுக்கவும் உதவுகிறது. சோதனை செய்து பார்க்க, வெங்காயச் சாற்றை எடுத்து அதனை கூந்தலில், குறிப்பாக வேர்களில் பயன்படுத்தவும். அதனை 40நிமிடங்களுக்கு அப்படியே விட்டு வைத்து பின்னர் அலசி விடவும். ஆற்றல்மிக்க  வாரம் இரண்டுமுறை பயன்படுத்தலாம்.

Share this post

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to All Articles