மலச்சிக்கலை இயற்கையாக எதிர்கொள்வதற்கான 5 சிறந்த வழிகள்

Back to All Articles
constipation

மலச்சிக்கலை இயற்கையாக எதிர்கொள்வதற்கான 5 சிறந்த வழிகள்

உணவுப்பொருள் குடலில் மெவாக நகர்வதன் காரணமாக ஏற்படலாம். இது பற்றாக்குறையான உணவு, வறட்சி, மருந்துகள், நாட்பட்ட நோய்கள் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் அல்லது சில மனநலக் கோளாறுகளின் காரணமாக ஏற்படலாம். மலச்சிக்கல் ஒரு நோய் அல்ல. வாரத்தில் மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பதை மலச்சிக்கல் கூறலாம். சிலருக்கு மலச்சிக்கல் அரிதாக ஏற்படலாம். சிலருக்கு அது நாட்பட்ட நோயாக இருக்கலாம். அது மலம் கழிக்க கடினமான அல்லது கழிக்க முடியாத  கட்டியான அல்லது கடினமான மலத்தை மற்றும் முழுவதுமாக மலம் கழிக்காத உணர்வைப் குறிப்பிடலாம். உணவுப் பாதையில் உணவு மெதுவாகச் செல்வதன் காரணமாக மலச்சிக்கல் ஏற்படலாம். இது பற்றாக்குறையான உணவு, வறட்சி, மருந்துகள், நாட்பட்ட நோய்கள் மற்றும் நரம்பு மண்டலம் அல்லது சில மனநலக் கோளாறுகள் காரணமாக ஏற்படலாம். மலச்சிக்கல் ஏற்படுவது துன்பத்தைக் கொடுப்பதாக மற்றும் அதேநேரத்தில் அசௌகரியமானதாக இருக்கலாம். சில உணவு மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்கள் மலப்போக்கை வழக்கமானதாக ஆக்கலாம். இவை உதவாவிட்டால் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

 

  1. உணவில் நார்ச்சத்தை சேருங்கள் : குடல் சரியாக செயல்பட கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து தேவை. பெரும்பாலான தாவர உணவுகள் சில அல்லது வேறு வகையான நார்ச்சத்தைக் கொண்டுள்ளன. நீங்கள் உங்கள் உணவில் அதிக அளவு கரையும் நார்ச்சத்துக் கொண்ட உணவுப் பொருட்களைச் சேர்க்க வேண்டும். இதில் ஓட்மீல், உருளைக் கிழங்கு, காய்ந்த பீன்ஸ், ரைஸ் பிரான், பார்லி, சிட்ரஸ் பழங்கள் மற்றும் பட்டானி அடங்கும். ஆயத்த உணவு, செயல்முறைப்படுத்தப்பட்ட உணவு, பாலாடைக் கட்டி, இறைச்சி மற்றும் ஐஸ் க்ரீம்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும்.
  2. நடமாட்டமில்லாத வாழ்க்கை முறையிலிருந்து அதிக நடமாட்டமுள்ள வாழ்க்கைக்கு மாறுங்கள்: நீங்கள் நாட்பட்ட மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால் வழக்கமாக உடற்பயிற்சி செய்வது பலன் தருவதாக அமையும். வழக்கமாக மலம் கழிக்க உடற்பயிற்சி முக்கியமானதாகும். உடல் செயல்பாடின்மை மலச்சிக்கலை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. உடற்பயிற்சி உணவுப் பொருள் பெருங்குடலை கடந்து செல்ல எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைக்கிறது. வழக்கமாக நடை பயிற்சி மேற்கொள்வது, ஓடுதல், யோகாசனம் அல்லது நீச்சலடித்தல் உங்கள் ஜீரணப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
  3. குடலும் மூளையும் நெருக்கமாக இணைக்கப்பட்டிருப்பதால் உணர்வுகளை சிறந்த முறையில் கையாளுங்கள்: இது உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் குடலும் மூளையும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. நீங்கள் மன அழுத்தமடைந்தால், கவலைப்பட்டால், தொந்தரவுக்கு ஆளானால் அல்லது மனச்சோர்வடைந்தால் அது உங்கள் ஜீரண அமைப்பின் மீதான எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
  4. தினமும் ஒரே நேரத்தில் மலம் கழியுங்கள்: ஒவ்வொரு நாளும் நீங்கள் ஒரு நிலையான நேரத்தைத் தேர்வு செய்து அந்த நேரத்தில் மலம் கழிக்க வேண்டும். உணவருந்திய பின்னர் இருபது முதல் நாற்பது நிமிடங்களில் மலம் கழிப்பது சிறந்தது. நீங்கள் காலையில் உங்கள் சிற்றுண்டியை உண்ட பின்னர் சுமார் இருபது நிமிடங்களுக்குப் பிறகு மலம் கழிக்குமாறு பல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீங்கள் மலம் கழிக்க முடிகிறதா என்று பார்க்க சுமார் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் செலவழிக்கவும். நீங்கள் மலம் கழிக்க முயற்சிக்கும்போது மிகவும் பிரயாசைப் படாமல் இருக்கவும்.
  5. பாரம்பரிய முறையில் அமரவும்: நீங்கள் உங்கள் கழிப்பறையில்  அமரும் முறையை மாற்றவும். அது நீங்கள் எளிதாக மலம் கழிக்க உதவும். ஒரு சிறிய ஸ்டூலின் மீதாக பாதங்களை வைத்து டாய்லெட் சீட்டில் நீங்கள் சாய்வாக அமர்ந்து மலம் கழிக்க முயற்சிக்கவும். நீங்கள் செங்குத்தாக அமர்ந்திருப்பதை விட இவ்வாறு அமர்வது எளிதாக மலம் கழிக்க உதவும். இது நீங்கள் உங்கள் பாதங்களால் உங்கள் அடிவயிற்று பகுதியின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அனுமதிக்கிறது.

Share this post

மறுமொழி இடவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back to All Articles