அமிலத்தன்மையை (அசிடிட்டி) நிர்வகிப்பதற்கான வாழ்க்கை முறைகள்
இன்றைய காலத்தில் அமில பின்னோட்ட நோய்(அசிட் ரிஃப்ளக்ஸ்), அமிலத்தன்மை (அசிடிட்டி), அடிக்கடி ஏப்பம் விடுதல், குடல் வீக்கம், வாய்வு கோளாறு ஆகியவற்றால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவை சரியான நேரத்தில் ஒழுங்காகக் கையாளப்படாவிட்டால், புற்றுநோய், நீரிழிவு,தோல் வியாதி, கூடுதல்எடையை குறைக்க இயலாமை, தலைமுடி சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட இன்னும் சில வியாதிகளையும் ஏற்படுத்தலாம். ஆரோக்கியமாக வாழ நமது உடலிலுள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. ஒரு அமிலத்தன்மை நிறைந்த உடலில், இந்த செல்கள் பிராண வாயு(ஆக்சிஜன்) உட்புக முடியாதவை ஆகி விடும். இதனால் உயிர்வாழும் சக்தியாக இருக்கும் ஆக்ஸிஜனை முற்றிலும் ஏற்க முடியாத செல்கள் பல உடற் பிரச்சினைகள் மற்றும் நோய்களை உருவாக்குகின்றன. இங்கே கூறப்படும் எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்களுக்கு அமிலத்தன்மையின் விளைவுகளிலிருந்து உடலை காத்துக்கொள்ள கண்டிப்பாக உதவும்.அமில நீக்கிகள்.(ஆன்டஸிட்ஸ்)
அமில நீக்கிகள்.(ஆன்டஸிட்ஸ்) அமிலத்தன்மையை அகற்றுவதற்கு நல்ல தீர்வல்ல ஏனெனில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி அதிக அளவில் மருந்தை எடுத்துக்கொள்ள தூண்டும்.. பெரும்பாலான அமில நீக்கிகள்.(ஆன்டஸிட்ஸ்) மக்னீசியம் கலந்து இருக்கும். இதனால் வயிற்றுப்போக்கு ஏற்படும். மேலும் அவற்றிலுள்ள அலுமினியம் மலச்சிக்கலுக்கு வழி வகுக்கும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளவர்கள், இந்த அமில நீக்கிகளை எடுத்துக்கொள்ளும் போது, மேலும் அவர்களை அவஸ்தைக்குள்ளாக்கி அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும். எனவே அமில நீக்கிகள்.(ஆன்டஸிட்ஸ்) அமிலத்தன்மையின் ஆரம்ப நிலை அறிகுறிகளை அகற்றுவதற்காக மட்டுமே உதவுகிறது. வாழ்க்கையில் நாம் பிரச்சனைக்கான மூல காரணத்தை ஆராய வேண்டும். எனவே நான் உங்கள் அமிலத்தன்மையை கவனித்துக்கொள்வதற்கு எளிய மற்றும் செலவில்லாத வாழ்க்கை முறை மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
உணவிற்கான இடைவெளிகள்
ஒரு மனித உடலிலானது சராசரியாக உணவை ஜீரணிக்க மூன்றரை முதல் நான்கு மணி நேரம் எடுக்கும்என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வயிற்றில் உணவை ஜீரணிக்க ஹைட்ராலிக் அமிலத்தை (HCT) உற்பத்தி செய்யும்.ஆகவே உங்கள் உணவிற்கான இடைவெளிகளை கவனியுங்கள். இடைவெளி நேரம் மேற்கூறியதை விட அதிகமானால், நீங்கள் அசிடிட்டி பாதிப்பக்கு உள்ளாவீர்கள். வயிற்றில் உணவு இல்லாத சமயத்தில் சுரக்கும் அமிலமானது வயிற்றின் உட்புற சுவற்றை அரிக்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக வயிற்று புண்கள்,(அல்சர்), அமில பின்னோட்ட நோய்(அசிட் ரிஃப்ளக்ஸ்) போன்ற நோய்கள் உருவாகி மென்மையான திசுக்கள் கொண்ட உணவுக்குழாயை மிகவும் சேதப்படுத்தி விடும். எனவே முதலில் உணவிற்கான இடைவெளிகளை சரியாக கடை பிடியுங்கள். தினந்தோறும் காலை,மதிய உணவு மாலை சிற்றுண்டி, இரவு உணவு ஆகியவற்றை சரியான இடைவெளிகளில் அதாவது மூன்றரை முதல் நான்கு மணி நேரத்திற்கு மிகாமல் உண்ண பழகுங்கள். அது அசிடிட்டியை குணப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
விரைவாக உணவை சாப்பிட வேண்டாம்
செரிமானம்/ஜீரணம் வாயில் இருந்தே துவங்குகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். உணவுகள் பற்களின் உதவியால் சிறுசிறு துகள்களாக்கி வயிற்றுக்கு அனுப்ப படுகிறது. நாம் உணவை மெதுவாக மென்று சாப்பிடாமல், அப்படியே விழுங்குவதால் செரிமானம் சரியாக ஆகாமல், அவற்றை செரிக்க செய்ய வயிறு அதிக அளவில் அமிலத்தை உற்பத்தி செய்யும். இதனால் அமிலத்தன்மை அதிகரித்து, அமில பின்னோட்ட நோய்(அசிட் ரிஃப்ளக்ஸ் உருவாகலாம். எனவே உணவை மென்று சாப்பிட பழகுங்கள். உங்கள் வாயில் உள்ள உமிழ்நீரில் (எச்சில்) முக்கிய நொதிக்கள் (என்சைம்கள்) உள்ளன. அவை கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமுள்ள உணவுகளை செரிக்க உதவி புரியும். எனவே, நாம் வயிற்றுக்குள் பாதியளவு செரித்த உணவுகளையே அனுப்புகிறோம். உங்கள் உடல் அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும் போது, அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்பட்டு, உங்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
சீரான உணவு நேரம்
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உங்கள் உணவை சாப்பிடுவது மிகவும் முக்கியம். எனவே உங்கள் காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவை ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நமது தசைகள், செல்கள், திசுக்கள் நம்மை போலவே நினைவுவைத்துக்கொள்ளும் தன்மையுடையவை. ஆகவே தினமும் உணவு உண்டவுடன் உடல் தசைகளானது அவற்றை செரிக்க தேவையான அமிலத்தை சீராக உற்பத்தி செய்ய ஞாபகபடுத்த படுகிறது.. எனவே ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ப உங்கள் வாழ்க்கை அட்டவணை மற்றும் உணவு நேரங்களை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
சாப்பிடும் உணவுகளில் கவனம்
பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், விதைகள் (ஸீட்ஸ்)மற்றும் கொட்டைகள்(நட்ஸ்) போன்ற ஆரோக்கியமான உணவை உண்ணும்போது உங்கள் உடல் அதை உடைக்க அமிலத்தை சரியான அளவு உற்பத்தி செய்கிறது. ஆனால் அதீத சர்க்கரை, உப்பு, காற்றடைக்க பட்ட பானங்கள்,சத்தற்ற குப்பை (ஜங்க்) உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றை உண்ணும் போது அவற்றை செரிப்பதற்கு ஏதுவாக மனித உடல் வடிவமைக்கப்படவில்லை. எனவே மனித உடல் அவற்றை செரிப்பதற்கு அதிக அளவில் அமிலத்தை உற்பத்தி செய்யும்.இது மேலும் அசிடிட்டி பாதிப்பையே ஏற்படுத்தும்.
உட்கொள்ளப்படும் மருந்துகள்
நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளில் சிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் பல மருந்துகள் அமிலத்தன்மைக்கு (அசிடிட்டி) காரணமாகின்றன. நுண்ணுயிர் எதிரி மருந்துகள் (ஆண்டிபயாடிக்குகள்) எடுத்துக்கொள்ளும்போது கூடவே புரோபயாடிக் மற்றும் பி காம்ப்ளக்ஸ் மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் உங்கள் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் விட்டமின்களை அழித்து விடும் அபாயம் உள்ளது. எனவே நீங்கள் அதை சரி செய்ய ‘பி காம்ப்ளக்ஸ்’ மருந்தை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
காரத்தன்மை(ஆல்கலைன்) அவசியம்
இயற்கையாகவே நமது உடல் காரத்தன்மையை(ஆல்கலைன்) தக்க வைத்துக்கொள்கிறது. உங்கள் உடலில் பி ஹெச்(PH)சீராக்கி (ரெகுலரேட்டர்) உள்ளது, இது தானாகவே உங்கள் உடலில் காரத்தன்மையை வைத்துக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது. ஆனால் நம்முடைய துரித வாழ்க்கை முறையில், சத்தில்லாத குப்பை உணவுகளை சாப்பிடுகிறோம், இதனால் உடல் அதிக அளவில் அமிலத்தை உற்பத்தி செய்கிறது. எனவே எலுமிச்சை சாறு குடிப்பது, வெள்ளரி அல்லது கேரட் அல்லது பச்சை காய்கறிகள் ஒரு கிண்ணம்(கப்) சாப்பிட வேண்டும். அது உங்கள் உடம்பில் உள்ள காரத்தன்மையை உருவாக்கும்.. சில நேரங்களில் குறிப்பாக சத்தில்லாத குப்பை உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை உட்கொள்வதால், நம்முடைய உடல் (காரத்தன்மையை உருவாக்கும் (ஆல்கலைன்) கூடுதல் முயற்சியை செய்ய வேண்டும். அதாவது பச்சை காய்கறிகள் அல்லது பழங்கள் சாப்பிட வேண்டும்.
தண்ணீர் & பிராண வாயு (ஆக்ஸிஜன்)
நம்மில் பலர் ஒரு நாளைக்கு மிகக்குறைவான நீரையே அருந்துகிறோம். இது பெரிய தவறு. உடலிக்கு தேவையான நீர் ஒரு சதவிகிதம் குறைந்தாலும் கூட உங்கள் உடலில் சோர்வு, அமிலத்தன்மை(அசிடிட்டி) மற்றும் எண்ணற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே ஒவ்வொரு நாளும் நீங்கள் குடிக்கின்ற நீரின் அளவு சரியானதாக உள்ளதா? என்பதை உறுதிப்படுத்தவும். யோகா, பிராணாயாமம் மற்றும் சில சுவாச/மூச்சு பயிற்சிகள் ஆகியவற்றை செய்வதால் அசிடிட்டியை குறைக்கலாம். நிச்சயமாக பிராண வாயு இதற்கு (ஆக்ஸிஜனின்) உதவி புரியும். நீங்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும், ஆக்ஸிஜன் உள்ளிழுக்கபடுவதால், உங்கள் உடலில் உள்ள அமில மற்றும் காரத்தன்மை அளவை சமநிலையில் வைக்க முடியும். நாம் சாப்பிட ஆரம்பிக்கும் முன்னர், மூன்று முறை ஆழமாக மூச்சை இழுத்து விடுவியுங்கள். இந்த ஒரு எளிய பயிற்சியினால் உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் சீராக பரவி, ஆரோக்கியமாக, உணவு உண்ண உதவும். எனவே, நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு கவளத்திற்கும்(ஸ்பூன்) இந்த பயிற்சியை கடைபிடியுங்கள். ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுக்க முயற்சி செய்யுங்கள். அதாவது ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து , மீண்டுமொரு முறை வெளியே விடுவது ஆகும்.
From a pimple to cancer, our You Care Wellness Program helps you find a way Talk to our integrative team of experts today 18001020253 |
Leave a Reply